Sunday, December 12, 2010

செய்திகள்

10 .05 .2012 . அன்று பட்டிருப்பு கல்வி வலயம் பாடசாலைகளுக்கிடையிலான band - பேண்ட் வாத்தியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 முன்னணிப் பாடசாலைகள்    காலத்து கொண்டன. பலத்த போட்டிக்கு மத்தியில் எமது கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
.30 .05 .2011 . அன்று பட்டிருப்பு கல்வி வலயம் பாடசாலைகளுக்கிடையிலான band - பேண்ட் வாத்தியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 16 முன்னணிப் பாடசாலைகள்    காலத்து கொண்டன. பலத்த போட்டிக்கு மத்தியில் எமது கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. எமது அணியினை பயிற்றுவித்தவர் திரு.நடேசன் தனுசாந்த். இவருக்கு எமது பாராட்டுக்கள். மாவட்டப்போட்டிக்குத் தயாராகின்றது எமது அணி. 
வணக்கம்..... ஒரு நிமிடம்...

எமது ஊர் மீது பற்றும் அக்கறையும் கொண்ட நீங்கள் இந்த வலையமைப்பைப் பார்த்தவுடன் மற்ற எமது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதுடன், உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

புலம் பெயர்த்துள்ள அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் தத்தமது நாடுகளில் பழைய மாணவர் சங்கங்களை உருவாக்க முயற்சி எடுங்கள். அதற்கான முழு ஒத்தாசைகளையும் இந்த வலையமைப்பினுடாக  இலகுவாகச் செய்யலாம்.
கனடாவில் வசிக்கும் கல்லாற்று மக்கள் ஒன்று சேர்த்து அமைத்திருக்கும் ஒன்றியத்திற்கு எமது வாழ்த்துக்கள். இது போல எல்லா நாடுகளிலும் எமது கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்களை உருவாக்க முயற்சி எடுங்கள்.
நன்றி வாழ்த்துக்கள். 
வணக்கம்.
எமது கல்லூரியில் 2006 ஆம் ஆண்டின் சுனாமியின் பின், மீள் கட்டுமாணப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக கல்லூரி நிருவாகம் முடியுமான முயற்சிகளை எடுத்து வந்தது என்றாலும் எதுவும் கைகூடவில்லை, இது தொடர்வாக முடியுமானவர்கள் பொருத்தமான இடங்களுக்கு தெரியப்படுத்தி, இதனை உலகறியச் செய்யுங்கள்.      


மீள் கட்டுமாணப் பணி தொடர வேண்டும்
பாடசாலைச் சமூகம்  பெரியகல்லாறு மத்திய கல்லூரி 2004 டிசெம்பர் மாதம் 26 ந் திகதி உலகை உலுக்கிய சுனாமி கடல் பேரலைத்தாக்கத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரியாகும் இங்கிருந்த கட்டடங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், சுற்றுமதில், விளையாட்டு மைதானம், கணணியறை என அனைத்தும் அழிவுற்று கற்குவியலாக காட்சியளித்து. அதனைத் தொடர்த்து, முன்னெடுத்த மீள்கட்டுமானப் பணிகளில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி காட்டுமானப் பணியை  மேற்கொள்ள இலங்கை ரோட்டரி இன்டனசனல் நிறுவனம் பாரமெடுத்தது. ஏறக்குறைய 105 மில்லியன் ரூபாய்க்கான வேலைகள் திட்டமிடப்பட்டன. அதற்கான  மீள்கட்டுமானப்   பணிகள் ஆரம்பிக்கப்பட்டது, எனினும் பொறுப்பெடுத்த ஒப்பந்த்க்கரர்கள் மேற்கொண்ட காட்டுமானப் பணிகள் திருப்தியாக இல்லாமல் இருந்தமையால், அப்போதைய அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன கல்விக் கரியலயங்களுக்கும், திணைக்களங்களுக்கும் சுட்டிக்கட்டியதைத் தொடர்த்து, அவை மேற்பார்வை செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் இடைநிறுத்தப்பட்டன. 
எந்தவொரு வேலையும் ஆரம்பிக்கப்படாத நிலையில், இடைநிறுத்தம் செய்யப்பட்ட வேலைகள், மீண்டும் இந்நாள் வரையும்   ஆரம்பிக்கப்படாமல் இருப்பது மிகவும் கவலை தருகிறது. இருந்தும் சுனாமியால் பாதிக்கப்பட்ட  அனைத்துப் பாடசாலைகளும் கட்டிமுடிக்கபட்டுள்ளது. இந்நிலையில் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என பாடசாலை, பாடசாலை கல்விச் சமூகம் என்பன கேள்வி எழுப்புகின்றன. 
தொடர்த்து, அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் முயற்சிகள் மூலம் இப்பாடசாலையின் இடைநிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முயற்சியை கல்லூரி அதிபர், பாடசாலை அபிவிருத்துச் சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு, என்பன மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. திரு.பொன்.செல்வராசாஅவர்களும் பாராளுமன்றத்தில் இரு தடவை குரல் எழுப்பியதுடன், கல்வியமைச்சின் செயலாளர், மற்றும் கட்டிட வேலைகள் பிரதம பொறியியலாளர் ஆகியோருடன் தொடர்த்து கதைத்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்ய முயற்சி செய்து வருகிறார்.


பெரிய கல்லாறு மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவும் எழுச்சியும் 

 பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா மிக விமர்சையாக 8.12 .2010 இல் நடைபெற்றது. 2008 , 2009  ற்கான ஆண்டுகளில் திறமை காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக இவ்விழா ஈட்பாடு செய்யபட்டிருந்தது. கல்வி புலத்தின் மாணவர்களின் திறன், ஆற்றல்களை வெளிக் கொண்டு வருவதற்க்காக பாட-இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முதன்மையான மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பாராட்டுக்கள் வழங்கபட்டன. மேலும் க.பொ.த.சா.தரத்தில் உயர் சித்தி, க.பொ.த.உ.தரத்தில் உயர் சித்தி மற்றும் பல்கலைக்கழகம், கல்வியியல் கல்லூரி என்பவற்றிற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இது தவிர பாடசாலை வரவை ஊக்குவிக்கும் முகமாக வரவு கூடிய மாணவர்களும் கெளரவிக்கபட்டனர். ஏறக்குறைய 450 மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இது கல்லூரியின் மிக பெரிய சாதனையாகும். இதனை விட அதிகமான மாணவர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் கௌரவிக்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது. 
அந்த வகையில் பரிசளிப்பு விழா நல்லமுறையில் நடைபெறுவதற்க்கு கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.கனகரெட்ணம், பாடசாலை அபிவிருத்தி குழுச் செயலாளர் திரு.தவராஜா மற்றும் அதன் உறுப்பினர்கள் எமது ஆசிரியர் குழுவுடன் இணைந்து மிக ஆர்வத்துடன் செயட்ப்பட்டனர். மேலும் இப்பரிசளிப்பு விழாவிற்குத் தேவையான நிதி வசதிகளை கிராமத்து மக்கள், நலம் விரும்பிகள்,வெளிநாட்டில் இருக்கும் கல்லாற்று நண்பர்கள் என பலதரப்பினரும் மிகவும் மனம் உவர்ந்து செய்தனர். சுவிஸ் நாட்டில் இருந்து நிதி பெறுவதற்க்கு திரு.ஜோன் அவர்கள் மிகவும் உதவியாக இருந்தார். இந்த வகையில் நல்ல முறையில் பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.பொன்.செல்வராஜா அவர்கள் தமது இதய பூர்வமான வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருந்தார்.
இவ்விழாவில் மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.குணநாயகம்,உள்ளூர் பிரமுகர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்,பட்டதாரி மாணவர் ஒன்றியம், பெற்றோர்கள்,அதிபர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரி முதல்வர் திரு.கே.நல்லதம்பி அவர்களின் மற்றுமொரு பாரிய முயற்சியாக இப்பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அவரது வழிகாட்டலிலும் ஆலோசனையினாலும் இம்முயற்சி முன்னெடுக்கப் பட்டது. இந்த வகையில் கல்லூரி முதல்வர் பாராட்ட பட வேண்டியவர்   ஆகிறார்







              

1 comment: