இனி தொடர்ந்து தகவல்களை அறியலாம்
ஜூனியர் ஸ்கூலில் இருந்தது மத்திய கல்லூரி வரையும்
ஜூனியர் ஸ்கூலில் இருந்தது மத்திய கல்லூரி வரையும்
இன்று கிழக்கிலங்கையில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரியகல்லாறு மத்தியகலூரியின் பெயர் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1946 இக் கல்லூரி உருவாக்கம் பெற்றிருந்தது. இது கடந்து வந்த பாதையில் பூக்களும் பூத்திருந்தன, முட்களும் நிறைந்திருந்தன. எமது இளையோர் சமூகத்தின் எதிர்காலத் தேவைக்காக இக் கல்லூரியின் வரலாற்றினை ஆய்வுக்கட்டுரையாக முடிந்தவரை தர முயற்சிக்கப்படுகின்றது.
தற்போதைய பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயம் 1946 ஆம் ஆண்டு காலப்பகுதியில் GTMS என அழைக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விநாயகர் வித்தியாலயம் இருந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கல்லாற்றைக் கல்வியூராக மாற்றிய பெருமை கொண்ட இந்த வித்தியலயத்திலேதான் மத்திய கல்லூரி உருவாக்கம் பெற்று, இன்று பாரிய விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. பெரியகல்லாறு மத்திய கல்லூரி அன்றைய GTMS இல் தகரக்கொட்டகையில் 1946 இல் யூனியர் ஸ்கூல் என்ற பெயருடன் இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பொழுது, முதல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் நிந்தவூரைச் சேர்ந்த திரு.லஷ்தகீர். இவர் ஓய்வு பெற்றவரும், உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் சேவை செய்த திரு. இசடீன் என்பவரின் மாமனார் ஆவார். மேலும் இவர் மேற்கத்தேயப் பாணியில் உடையணிபவர் ஆகவும், ஆங்கிலத்தில் நன்கு சிறப்பு பெற்றவராகவும் இருந்தார்.
GTMS இல் ஆரம்பிக்கப்பட்ட ஜூனியர் ஸ்கூல் 1948 ஆம் ஆண்டு விநாயகர் ஆலயத்திற்கு தெற்குப் புறமாக மாற்றபட்டது. அது சீலிங்க்பலகையால் பக்கம் அடைக்கப்பட்டு கிடுகால் கூரை வேயப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் கோயிலுக்கு அண்மையில் அமைந்திருந்த ''வக்கரின்'' கடையின் பின்பக்கத்து வீட்டிலும் வகுப்புக்கள் (சங்கீதம்) நடைபெற்றன.
வகுப்புகள் மேலும் அதிகரித்த போது நிரந்தரமான கட்டிடத்திற்கு பாடசாலை மாற்றப்படவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அன்றைய சித்தி விநாயகர் ஆலயத்தின் வண்ணக்கர் திரு மூ.மார்க்கண்டும் அவரது நிருவாக சபையினருமாக முடிவெடுத்து நான்கு ஏக்கர் காணியும் 10,000 ரூபாய் பணமும் கொடுத்து 1950 இல் இக்கல்லூரி இன்றிருக்கும் இடத்தில் Form 1 , Form 2 , Form 3 , என அழைக்கபட்டன.
1961 - 1967 வரையிலான காலப்பகுதில் திரு. வேதநாயகம் (கல்முனை) அதிபராக கடமையாற்றினார். இவரைத் தொடர்ந்து திரு. கந்தையாப்பண்டிதரும் அவரைத்தொடர்ந்து திரு.ஞானரெட்ணம் அவர்களும் அதிபர்களாக கடமையாற்றினார்கள். 1965 ஆம் ஆண்டு திரு.கிருபைராஜா ஆசிரியர் அவர்கள் பயிற்சியின் கீழ் அனுராதபுரத்தில் நடைபெற்ற அகிலஇலங்கை ரீதியான உடற்பற்சிப் கலந்துகொண்ட இப்பாடசாலையின் 2 ஆம் இடத்தைப் பெற்றது. திரு. கந்தையாப்பண்டிதரின் காலப்பகுதியில் (1966) சேரன் (மஞ்சள் நிறம்), சோழன் (சிவப்பு நிறம்), பாண்டியன் (நீல நிறம்) என்றாலும் 1969 இல் தான் தற்போதுள்ள மருதம் (மஞ்சள்), முல்லை (பச்சை), நெய்தல் (நீலம்) ஆகிய இல்லங்கள் உருவாக்கப்பட்டன. இக்காலத்தில் பொறிமுறை வரைதல் பாடத்தைப் போதித்த திரு.கு.கிருபைராசா குறிப்பிடத்தக்கவர். இரவுநேர வகுப்புகளையும் இக்காலப்பகுதியில் நடத்தியிருந்தார்.
1950 இல் தற்போதைய இடத்திற்கு ஜூனியர் ஸ்கூல் என்ற பெயருடன் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டபொழுது புதிய அதிபராக கடமை ஏற்றுக்கொண்டவர் திரு,வேதநாயகம் இதனால் இக் கல்லூரியின் முதல் அதிபர் இவரே எனக்கருதுவோரும் உளர். திரு.வேதநாயகம் அவர்கள்(1950 - 1953) மூன்று வருட காலம் மட்டுமே அதிபராகச் சேவைசெய்தார். பின்னர் கொழும்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றார்.
இதனைத் தொடர்ந்து திரு. A.N .கிருஷ்ணபிள்ளை (1953 - 1958) அதிபராக கடமையேற்றார். இவர் கிறிஸ்தவராகவும் ஆங்கிலத்தில் ஆழாமான அறிவு கொண்டவராக இருந்தாலும் இவரது அதிபர் அலுவலகத்தில் பலசமையப் படங்களுக்கு தினமும் ஊதுபத்தி வைத்து வழிபடும் வழக்கமுடையவர். இக்காலப்பகுதியில் இரவுநேரப் பாடசாலையகவும், 600பிள்ளைகள் கல்விகற்றதாகவும், 18 ஆசிரியர்கள் இருந்ததாகவும் திரு. கோ. நடராசா கூறினார்.
இதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் அதிபர்கள் தொடர்பாக பல இழுபறி நிலைகாணப் பட்டது. (1958 - 1961) இந்த சிக்கலான இடைவெளியில் திரு.கோ. நடராசா அவர்களும் கடமை ஆற்றியிருகின்றார். இந்நிலைமையை கருத்திற் கொண்ட கல்வியமைச்சு ஏற்கனவே இங்கு அதிபராக கடமையாற்றிக் கொழும்பு மாவட்டத்திற்கு மாற்றலாகிச் சென்ற திரு.வேதநாயகம் அவர்களை மீண்டும் அதிபராக நியமனம் செய்தது (1961). பாடசாலை அமைதியாக சென்று கொண்டிருந்தது.
1967 இல் அதிபராக கடமை ஏற்றுக்கொண்டவர் திரு,கந்தையா பண்டிதர். (1967 - 1971) ஒப்பீட்டளவில் பெரியகல்லாறு மகாவித்தியாலம் வெளிச்சத்தை அதிகம் பெற்றுக்கொண்டமை இவரது காலத்திலேயே என நம்பபடுகிறது. இவர் அதிபர் சேவையில் வகுப்பு - I ஐச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரிக்கன் விளக்கின் உதவியுடன் இரவுநேர வகுப்புகளும் இக்காலப் பகுதியில் நடைபெற்றன. இதில் கல்வி கற்ற்வர்களுள் மட்டகளப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த திரு. சீ. சண்முகம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.
திரு.S.I. ஞானரெட்ணம் அதிபராக இருந்த காலப்பகுதியில் சிலகுழப்பமான தோன்றவே இவர் பாடசாலையை விட்டு நீங்கினர். இதன்பின் திரு.சி. இளையதம்பி, திரு.மு.கணேசதுரை, திரு.த. அரியரெட்ணம் ஆகியோர் இக்காலப்பகுதியில் அதிபர்களாக கடமைசெய்துள்ளனர்.
01 .07 .1976 இல் திரு. க.கோபால் (யாழ்ப்பாணம்) அதிபராகப் பாடசாலையைப் பொறுப் ஏற்றபின் தெளிந்த நிலையில் சீராக பாடசாலை கொண்டு செல்லப்பட்டது. அவர் ஆளுமைமிக்க அதிபராகத் தென்பட்டார். கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் வலுவான நிலையை எட்டியது. ஆசிரியர்களும் உள்முரண்பாடுகள் இல்லாமல் தமது கடமையை செய்யத் தொடங்கினர்.
திரு.கோபால் அதிபராகப் பணியாற்றிய காலப் பகுதியிலேயே (01 .07 .1976 - 24 .02 .1982 ) இப் பாடசாலை 1978 இல் சூறாவளித் தாக்கத்திற்குள்ளாகி பாரிய அழிவைக் கண்டது.எல்லாக் கட்டிடங்களும் தரை மட்டமாகின. இதனைத் தொடர்ந்து பாடசாலையின் மீள் கட்டுமானத்திற்கான பொதுமக்களின் ஒன்று கூடலைத் தொடர்ந்து 11 .01 .1979 இல் 80x20 (அடி) இல் ஓர் ஓலைக் கொட்டிலும்,13 .01 .1979 இல் 60x20 (அடி)இல் இன்னுமொரு ஓலைக் கொட்டிலும் கட்டிமுடிக்கப்பட்டன. இக் காலகட்டத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பூ.கணேசலிங்கம் அவர்களின் பங்களிப்பானது மிகவும் காத்திரமாக இருந்தது.
24 .02 .1982 இல் திரு.மு.சிவபாலப்பிள்ளை (1982 -1984 ) அதிபராகப் பொறுப்பு ஏற்றவுடன் உயர்தரம் கணித,விஞ்ஞான வகுப்புக்களில் கல்வி பயின்ற மாணவர்கள் கமு/உவெஸ்லி உ.த பாடசாலை,கமு/கார்மேல் பாத்திமாக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு செல்லத் தொடங்கினர். கலை வகுப்புக்களும் தளம்பல் நிலையை அடைந்தது. அனேகமான கலை வகுப்பு மாணவர்கள் மட்/பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு செல்லத் தொடங்கினர் .முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பூ.கணேசலிங்கம் அவர்களின் தலையீட்டில் கலை வகுப்பு மாணவர்கள் மீண்டும் இப் பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இக் காரணங்களால் திரு.மு.சிவபாலப்பிள்ளை பல முன்மாதிரியான விடயங்களை செய்ய நினைத்தாலும் இவரது சேவைக்காலம் திருப்தியானது எனக் கூறுவதில் அதிகமானோர் பின்நிற்கின்றனர்.
15 .09 .1984 இல் திரு.S .O . ஜெயானந்தன் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.இருந்தாலும் இவரது ஆரம்ப காலம் சாதாரணமாகக் கழிந்தாலும் இவரது சேவைக்காலத்தில் இறுதிக் கட்டத்தில் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி வந்தது.
1976 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இப் பாடசாலையிலேயே பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியாராகக் கடமையாற்றிய திரு.E .P.ஆனந்தராஜா 22 .02 .1988 இல் அதிபராகப் பாடசாலையைப் பொறுப்பு........அதில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.எம்.நடராஜா, திரு.கந்தசாமி, திருமதி.எஸ்.சகுந்தலா, திரு.நடேச மூர்த்தி, திரு.அன்னநவபாரதி, திருமதி.நந்தினிநடேச மூர்த்தி, திரு.கோபாலபிள்ளை, திருமதி.லூஜீஸ், திருமதி.பிரான்சீஸ், திரு.perinparaj போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். பாண்டு வாத்தியக்குழு உருவாக்கப்பட்டது.சாரணர் அணி உருவாக்கம்,A /ல் யூனியன் போன்ற பல சாதனைகளைப் புரிந்தார்.மதிய உணவிற்காக அநேக நேரங்களில் வீ ட்டிற்கு செல்லாமல் கல்லூரியில் தரித்து நின்று ஏதாவது செய்து கொண்டே இருக்கும் அந்த மனிதர் எளிமையானவராகவும், கண்டிப்பனவரகவும், பழைய துவிச்சக்கர வண்டி ஒன்றையே பயணத்திற்கு அதிகமாக பயன்படுத்துபவராகவும் இருந்தார்.
இவரது காலப்பகுதியிலேயே கொத்தணி முறையும் நடைமுறையிலிருந்தது. கொத்தணி முறைமையின் அதிபராகவும் இவரே கடமையாற்றினார்.
திரு.R .கோபாலபிள்ளை(1997 -2008) 27.08 .1997 அன்று இக்கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். திரு.E.Pஆனந்தராஜா முன் எடுத்த பல பணிகளை முன்னின்று வழிநடாத்தி செயல் வடிவம் பெற வைப்பதில் கவனமாய் இருந்தார்.இவரது காலப்பகுதியில் ஏராளமான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டனர்.இவர் ஓய்வு பெற்று சென்ற நிலையில் திரு.T . நடேச மூர்த்தி(09 .06 .2008 -22 .08 .2008 )இவர்கல்லூரியின் மிகவேகமாக மீள் கட்டுமான வேலைகளை செய்வதற்காக முனைப்புடன் செயற்பட்ட போதிலும்,துரதிஸ்டவசமாக சில நாட்களே கல்லூரியில் வேலை செய்ய முடிந்தது.என்றாலும் குறுகிய காலத்திற்குள் இவர் முன் எடுத்த செயற்திட்டங்கள் காத்திரமானவை.
இவ்வாறான ஒரு இக்கட்டான காலப்பகுதியில் இக் கல்லூரிக்குக் கிடைத்தவரமாக திரு.K .நல்லதம்பி அவர்கள் 22 .11 .2008 இல் புதியஅதிபராகப் பதவி யேற்றுக் கொண்டார். இவர் கல்லூரியைப் பாரமெடுத்த பொழுது இவரைபற்றியும், இவரது சேவையைப் பற்றியும் பெரியகல்லாறு
தொடர்ந்ததும் எமது கல்லூரின் வரலாறு பிரசுரிக்கப்படும். நீங்களும் இது தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த வரலாற்று விடயங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
No comments:
Post a Comment