Sunday, December 4, 2011

NEWS..


இனி தொடர்ந்து தகவல்களை அறியலாம் ...

Sunday, December 12, 2010

படங்கள்

இனி தொடர்ந்து தகவல்களை அறியலாம் 
மட்டக்களப்பில் 2011  காண   பேண்ட் வாத்தியப் போட்டி நடைபெற்றது. எமது கல்லூரி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.  

28 .11 .2011 அன்று எமது கல்லூரின் நூலக வாரம்  நடைபெற்றது. அவை தொடர்பான காட்சிகள் இவை.
நூலக வாரம் - 2011
மாணவியரின் வில்லுப்பாட்டு  
மாணவியரின் பரத நாட்டியம் 
தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.s .நாகராஜா மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குகின்றார் 
Big Match 2011 
எமது கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்  திரு. வ.திருச்செல்வம்  
Big Match 2011 பிரதம அதிதிகள்   மற்றும் அதிபர் 

Big Match 2011
கல்லூரியின் சிரேஷ்ட பேண்ட் வாத்தியக் குழுவினர் 

Big Match 2011
மட்.பாராளுமன்ற உறுப்பினர் திரு.பொன்.செல்வராசா மற்றும் அதிதிகள்  

Big Match 2011
எமது கல்லூரியின் கிரிக்கெட் அணி  
 எமது கல்லூரியின் கிரிக்கெட் அணி பயிற்ருவிப்பாளர் 
திரு.மோசேஸ் அவர்கள் 
Big Match 2011 
1996 இல் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா 
Big Match 2011

1996 இல் உலகைக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி கிரிக்கெட் வீரர்கள் திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா 

மற்றும் எமது கல்லூரியின் கிரிக்கெட் அணி  

Big Match 2011 தொடக்கவிழா

Big Match 2011 
திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா, அதிபர், மற்றும் கல்லாறு கடின பந்து விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்    

Big Match 2011
திரு.ரவீந்திர புஷ்பகுமார, திரு.லங்கா டி சில்வா, அதிபர், மற்றும் கல்லாறு கடின பந்து விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்    
Big Match 2011 - கல்லூரி மாணவர்கள் 
எமது ஊரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் 2010 .

எமது கல்லூரியில் மீன் தொட்டிக்கு மீன்கள் இடப்பட்டன 

எமது கல்லூரியில் மீன் தொட்டிக்கு மீன்கள் இடப்பட்டன - ஹரிஷாந்த் 

எமது கல்லூரியில் அண்மையில் மரங்கள் நடப்பட்டன 
ஆசிரியர் திரு சிவபாலன் சசிகரன் 
எமது கல்லூரியில் அண்மையில் மரங்கள் நடப்பட்டன. 
கல்லூரி முதல்வர் க, நல்லதம்பி 
எமது கல்லூரியில் அண்மையில் நடந்த சிரமதானம் - மாணவிகள் 
  எமது கல்லூரியில் அண்மையில் நடந்த சிரமதானம் -
 மாணவிகள் - ஆங்கில ஆசிரியை சி.எம் ஜெயச்சந்திரன் 
எமது கல்லூரியில் அண்மையில் நடந்த சிரமதானம் 
 கல்லூரியில் மரம் நாட்டும் நிகழ்வு 10 . 01 . 2011  அன்று நடைபெற்றது 
 கல்லூரியில் மரம் நாட்டும் நிகழ்வு 10 . 01 . 2011  அன்று நடைபெற்றது 
 கல்லூரியில் மரம் நாட்டும் நிகழ்வு 10 . 01 . 2011  அன்று நடைபெற்றது 
2010 எமது கல்லூரியின் ஜூனியர் பேண்ட் வாத்தியக் குழுவினர் 
2010 எமது கல்லூரியின் சீனியர் பேண்ட் வாத்தியக் குழுவினர் 

செய்திகள்

10 .05 .2012 . அன்று பட்டிருப்பு கல்வி வலயம் பாடசாலைகளுக்கிடையிலான band - பேண்ட் வாத்தியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 முன்னணிப் பாடசாலைகள்    காலத்து கொண்டன. பலத்த போட்டிக்கு மத்தியில் எமது கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
.30 .05 .2011 . அன்று பட்டிருப்பு கல்வி வலயம் பாடசாலைகளுக்கிடையிலான band - பேண்ட் வாத்தியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 16 முன்னணிப் பாடசாலைகள்    காலத்து கொண்டன. பலத்த போட்டிக்கு மத்தியில் எமது கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. எமது அணியினை பயிற்றுவித்தவர் திரு.நடேசன் தனுசாந்த். இவருக்கு எமது பாராட்டுக்கள். மாவட்டப்போட்டிக்குத் தயாராகின்றது எமது அணி. 
வணக்கம்..... ஒரு நிமிடம்...

எமது ஊர் மீது பற்றும் அக்கறையும் கொண்ட நீங்கள் இந்த வலையமைப்பைப் பார்த்தவுடன் மற்ற எமது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதுடன், உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

புலம் பெயர்த்துள்ள அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் தத்தமது நாடுகளில் பழைய மாணவர் சங்கங்களை உருவாக்க முயற்சி எடுங்கள். அதற்கான முழு ஒத்தாசைகளையும் இந்த வலையமைப்பினுடாக  இலகுவாகச் செய்யலாம்.
கனடாவில் வசிக்கும் கல்லாற்று மக்கள் ஒன்று சேர்த்து அமைத்திருக்கும் ஒன்றியத்திற்கு எமது வாழ்த்துக்கள். இது போல எல்லா நாடுகளிலும் எமது கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்களை உருவாக்க முயற்சி எடுங்கள்.
நன்றி வாழ்த்துக்கள். 
வணக்கம்.
எமது கல்லூரியில் 2006 ஆம் ஆண்டின் சுனாமியின் பின், மீள் கட்டுமாணப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக கல்லூரி நிருவாகம் முடியுமான முயற்சிகளை எடுத்து வந்தது என்றாலும் எதுவும் கைகூடவில்லை, இது தொடர்வாக முடியுமானவர்கள் பொருத்தமான இடங்களுக்கு தெரியப்படுத்தி, இதனை உலகறியச் செய்யுங்கள்.      


மீள் கட்டுமாணப் பணி தொடர வேண்டும்
பாடசாலைச் சமூகம்  பெரியகல்லாறு மத்திய கல்லூரி 2004 டிசெம்பர் மாதம் 26 ந் திகதி உலகை உலுக்கிய சுனாமி கடல் பேரலைத்தாக்கத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரியாகும் இங்கிருந்த கட்டடங்கள், உபகரணங்கள், தளபாடங்கள், சுற்றுமதில், விளையாட்டு மைதானம், கணணியறை என அனைத்தும் அழிவுற்று கற்குவியலாக காட்சியளித்து. அதனைத் தொடர்த்து, முன்னெடுத்த மீள்கட்டுமானப் பணிகளில் பெரியகல்லாறு மத்திய கல்லூரி காட்டுமானப் பணியை  மேற்கொள்ள இலங்கை ரோட்டரி இன்டனசனல் நிறுவனம் பாரமெடுத்தது. ஏறக்குறைய 105 மில்லியன் ரூபாய்க்கான வேலைகள் திட்டமிடப்பட்டன. அதற்கான  மீள்கட்டுமானப்   பணிகள் ஆரம்பிக்கப்பட்டது, எனினும் பொறுப்பெடுத்த ஒப்பந்த்க்கரர்கள் மேற்கொண்ட காட்டுமானப் பணிகள் திருப்தியாக இல்லாமல் இருந்தமையால், அப்போதைய அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன கல்விக் கரியலயங்களுக்கும், திணைக்களங்களுக்கும் சுட்டிக்கட்டியதைத் தொடர்த்து, அவை மேற்பார்வை செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் இடைநிறுத்தப்பட்டன. 
எந்தவொரு வேலையும் ஆரம்பிக்கப்படாத நிலையில், இடைநிறுத்தம் செய்யப்பட்ட வேலைகள், மீண்டும் இந்நாள் வரையும்   ஆரம்பிக்கப்படாமல் இருப்பது மிகவும் கவலை தருகிறது. இருந்தும் சுனாமியால் பாதிக்கப்பட்ட  அனைத்துப் பாடசாலைகளும் கட்டிமுடிக்கபட்டுள்ளது. இந்நிலையில் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என பாடசாலை, பாடசாலை கல்விச் சமூகம் என்பன கேள்வி எழுப்புகின்றன. 
தொடர்த்து, அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் முயற்சிகள் மூலம் இப்பாடசாலையின் இடைநிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முயற்சியை கல்லூரி அதிபர், பாடசாலை அபிவிருத்துச் சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு, என்பன மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. திரு.பொன்.செல்வராசாஅவர்களும் பாராளுமன்றத்தில் இரு தடவை குரல் எழுப்பியதுடன், கல்வியமைச்சின் செயலாளர், மற்றும் கட்டிட வேலைகள் பிரதம பொறியியலாளர் ஆகியோருடன் தொடர்த்து கதைத்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்ய முயற்சி செய்து வருகிறார்.


பெரிய கல்லாறு மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவும் எழுச்சியும் 

 பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா மிக விமர்சையாக 8.12 .2010 இல் நடைபெற்றது. 2008 , 2009  ற்கான ஆண்டுகளில் திறமை காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக இவ்விழா ஈட்பாடு செய்யபட்டிருந்தது. கல்வி புலத்தின் மாணவர்களின் திறன், ஆற்றல்களை வெளிக் கொண்டு வருவதற்க்காக பாட-இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முதன்மையான மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பாராட்டுக்கள் வழங்கபட்டன. மேலும் க.பொ.த.சா.தரத்தில் உயர் சித்தி, க.பொ.த.உ.தரத்தில் உயர் சித்தி மற்றும் பல்கலைக்கழகம், கல்வியியல் கல்லூரி என்பவற்றிற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இது தவிர பாடசாலை வரவை ஊக்குவிக்கும் முகமாக வரவு கூடிய மாணவர்களும் கெளரவிக்கபட்டனர். ஏறக்குறைய 450 மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இது கல்லூரியின் மிக பெரிய சாதனையாகும். இதனை விட அதிகமான மாணவர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் கௌரவிக்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது. 
அந்த வகையில் பரிசளிப்பு விழா நல்லமுறையில் நடைபெறுவதற்க்கு கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.கனகரெட்ணம், பாடசாலை அபிவிருத்தி குழுச் செயலாளர் திரு.தவராஜா மற்றும் அதன் உறுப்பினர்கள் எமது ஆசிரியர் குழுவுடன் இணைந்து மிக ஆர்வத்துடன் செயட்ப்பட்டனர். மேலும் இப்பரிசளிப்பு விழாவிற்குத் தேவையான நிதி வசதிகளை கிராமத்து மக்கள், நலம் விரும்பிகள்,வெளிநாட்டில் இருக்கும் கல்லாற்று நண்பர்கள் என பலதரப்பினரும் மிகவும் மனம் உவர்ந்து செய்தனர். சுவிஸ் நாட்டில் இருந்து நிதி பெறுவதற்க்கு திரு.ஜோன் அவர்கள் மிகவும் உதவியாக இருந்தார். இந்த வகையில் நல்ல முறையில் பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு.பொன்.செல்வராஜா அவர்கள் தமது இதய பூர்வமான வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருந்தார்.
இவ்விழாவில் மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.குணநாயகம்,உள்ளூர் பிரமுகர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்,பட்டதாரி மாணவர் ஒன்றியம், பெற்றோர்கள்,அதிபர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரி முதல்வர் திரு.கே.நல்லதம்பி அவர்களின் மற்றுமொரு பாரிய முயற்சியாக இப்பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அவரது வழிகாட்டலிலும் ஆலோசனையினாலும் இம்முயற்சி முன்னெடுக்கப் பட்டது. இந்த வகையில் கல்லூரி முதல்வர் பாராட்ட பட வேண்டியவர்   ஆகிறார்







              

Saturday, December 11, 2010

விளையாட்டு

2011 விளையாட்டுப் போட்டி - பேண்ட் வாத்தியக் குழு பயிற்றுவிப்பாளர் திரு தனுஷாந்த் உடன்   

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு, பொன். செல்வராஜா அழைத்துவரப்படுகின்====

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு, பொன். செல்வராஜா அழைத்துவரப்படுகின்====

2011 விளையாட்டுப் போட்டி

2011 விளையாட்டுப் போட்டி

2011 விளையாட்டுப் போட்டி

கல்லூரி முதல்வர் உரை 

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு, பொன். செல்வராஜா உரை 

    
cricket Team 2010


Sports meet 2010


Sports meet 2010

Sports meet 2010


Volley Ball Team 2010

கல்லூரி வரலாறு

இனி தொடர்ந்து தகவல்களை அறியலாம் 
ஜூனியர் ஸ்கூலில்  இருந்தது மத்திய கல்லூரி வரையும் 

இன்று கிழக்கிலங்கையில்   மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரியகல்லாறு மத்தியகலூரியின் பெயர் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1946 இக் கல்லூரி உருவாக்கம் பெற்றிருந்தது. இது கடந்து வந்த பாதையில் பூக்களும் பூத்திருந்தன, முட்களும் நிறைந்திருந்தன. எமது இளையோர் சமூகத்தின் எதிர்காலத் தேவைக்காக இக் கல்லூரியின் வரலாற்றினை ஆய்வுக்கட்டுரையாக முடிந்தவரை  தர முயற்சிக்கப்படுகின்றது.   

தற்போதைய பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயம் 1946 ஆம் ஆண்டு காலப்பகுதியில் GTMS என அழைக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விநாயகர் வித்தியாலயம் இருந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கல்லாற்றைக் கல்வியூராக மாற்றிய பெருமை கொண்ட இந்த வித்தியலயத்திலேதான் மத்திய கல்லூரி உருவாக்கம் பெற்று,  இன்று பாரிய விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. பெரியகல்லாறு மத்திய கல்லூரி அன்றைய GTMS இல்   தகரக்கொட்டகையில் 1946 இல் யூனியர் ஸ்கூல் என்ற பெயருடன் இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பொழுது, முதல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் நிந்தவூரைச் சேர்ந்த திரு.லஷ்தகீர்.  இவர் ஓய்வு பெற்றவரும், உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் சேவை செய்த திரு. இசடீன் என்பவரின் மாமனார் ஆவார். மேலும் இவர் மேற்கத்தேயப்   பாணியில் உடையணிபவர் ஆகவும், ஆங்கிலத்தில் நன்கு சிறப்பு பெற்றவராகவும் இருந்தார்.  

GTMS இல் ஆரம்பிக்கப்பட்ட ஜூனியர் ஸ்கூல் 1948 ஆம் ஆண்டு விநாயகர் ஆலயத்திற்கு தெற்குப் புறமாக மாற்றபட்டது. அது சீலிங்க்பலகையால் பக்கம் அடைக்கப்பட்டு கிடுகால் கூரை வேயப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் கோயிலுக்கு அண்மையில் அமைந்திருந்த ''வக்கரின்'' கடையின் பின்பக்கத்து வீட்டிலும் வகுப்புக்கள் (சங்கீதம்) நடைபெற்றன.


வகுப்புகள் மேலும் அதிகரித்த போது நிரந்தரமான கட்டிடத்திற்கு பாடசாலை மாற்றப்படவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அன்றைய சித்தி விநாயகர் ஆலயத்தின் வண்ணக்கர் திரு மூ.மார்க்கண்டும் அவரது நிருவாக சபையினருமாக முடிவெடுத்து நான்கு ஏக்கர் காணியும் 10,000 ரூபாய் பணமும் கொடுத்து 1950 இல் இக்கல்லூரி இன்றிருக்கும் இடத்தில் Form 1 , Form 2 , Form 3 , என அழைக்கபட்டன.


1961 - 1967 வரையிலான காலப்பகுதில் திரு. வேதநாயகம் (கல்முனை) அதிபராக கடமையாற்றினார். இவரைத் தொடர்ந்து திரு. கந்தையாப்பண்டிதரும் அவரைத்தொடர்ந்து திரு.ஞானரெட்ணம் அவர்களும் அதிபர்களாக கடமையாற்றினார்கள். 1965 ஆம் ஆண்டு திரு.கிருபைராஜா ஆசிரியர் அவர்கள் பயிற்சியின் கீழ் அனுராதபுரத்தில் நடைபெற்ற அகிலஇலங்கை ரீதியான உடற்பற்சிப் கலந்துகொண்ட இப்பாடசாலையின் 2 ஆம் இடத்தைப் பெற்றது. திரு. கந்தையாப்பண்டிதரின் காலப்பகுதியில் (1966) சேரன் (மஞ்சள் நிறம்), சோழன் (சிவப்பு நிறம்), பாண்டியன் (நீல நிறம்) என்றாலும் 1969 இல் தான் தற்போதுள்ள மருதம் (மஞ்சள்), முல்லை (பச்சை), நெய்தல் (நீலம்) ஆகிய இல்லங்கள் உருவாக்கப்பட்டன. இக்காலத்தில் பொறிமுறை வரைதல் பாடத்தைப் போதித்த திரு.கு.கிருபைராசா குறிப்பிடத்தக்கவர். இரவுநேர வகுப்புகளையும் இக்காலப்பகுதியில் நடத்தியிருந்தார்.

1950 இல் தற்போதைய இடத்திற்கு ஜூனியர் ஸ்கூல் என்ற பெயருடன் கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டபொழுது புதிய அதிபராக கடமை ஏற்றுக்கொண்டவர் திரு,வேதநாயகம் இதனால் இக் கல்லூரியின் முதல் அதிபர் இவரே எனக்கருதுவோரும் உளர். திரு.வேதநாயகம் அவர்கள்(1950 - 1953) மூன்று வருட காலம் மட்டுமே அதிபராகச் சேவைசெய்தார். பின்னர் கொழும்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றார்.

இதனைத் தொடர்ந்து திரு. A.N .கிருஷ்ணபிள்ளை (1953 - 1958) அதிபராக கடமையேற்றார். இவர் கிறிஸ்தவராகவும் ஆங்கிலத்தில் ஆழாமான அறிவு கொண்டவராக இருந்தாலும் இவரது அதிபர் அலுவலகத்தில் பலசமையப் படங்களுக்கு தினமும் ஊதுபத்தி வைத்து வழிபடும் வழக்கமுடையவர். இக்காலப்பகுதியில் இரவுநேரப் பாடசாலையகவும், 600பிள்ளைகள் கல்விகற்றதாகவும், 18 ஆசிரியர்கள் இருந்ததாகவும் திரு. கோ. நடராசா கூறினார்.

இதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் அதிபர்கள் தொடர்பாக பல இழுபறி நிலைகாணப் பட்டது. (1958 - 1961) இந்த சிக்கலான இடைவெளியில் திரு.கோ. நடராசா அவர்களும் கடமை ஆற்றியிருகின்றார். இந்நிலைமையை கருத்திற் கொண்ட கல்வியமைச்சு ஏற்கனவே இங்கு அதிபராக கடமையாற்றிக் கொழும்பு மாவட்டத்திற்கு மாற்றலாகிச் சென்ற திரு.வேதநாயகம் அவர்களை மீண்டும் அதிபராக நியமனம் செய்தது (1961). பாடசாலை அமைதியாக சென்று கொண்டிருந்தது.

1967 இல் அதிபராக கடமை ஏற்றுக்கொண்டவர் திரு,கந்தையா பண்டிதர். (1967 - 1971) ஒப்பீட்டளவில் பெரியகல்லாறு மகாவித்தியாலம் வெளிச்சத்தை அதிகம் பெற்றுக்கொண்டமை இவரது காலத்திலேயே என நம்பபடுகிறது. இவர் அதிபர் சேவையில் வகுப்பு - I ஐச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரிக்கன் விளக்கின் உதவியுடன் இரவுநேர வகுப்புகளும் இக்காலப் பகுதியில் நடைபெற்றன. இதில் கல்வி கற்ற்வர்களுள் மட்டகளப்பு மாவட்ட அரச அதிபராக இருந்த திரு. சீ. சண்முகம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.

திரு.S.I. ஞானரெட்ணம் அதிபராக இருந்த காலப்பகுதியில் சிலகுழப்பமான தோன்றவே இவர் பாடசாலையை விட்டு நீங்கினர். இதன்பின் திரு.சி. இளையதம்பி, திரு.மு.கணேசதுரை, திரு.த. அரியரெட்ணம் ஆகியோர் இக்காலப்பகுதியில் அதிபர்களாக கடமைசெய்துள்ளனர்.



01 .07 .1976 இல் திரு. க.கோபால் (யாழ்ப்பாணம்) அதிபராகப் பாடசாலையைப் பொறுப் ஏற்றபின் தெளிந்த நிலையில் சீராக பாடசாலை கொண்டு செல்லப்பட்டது. அவர் ஆளுமைமிக்க அதிபராகத் தென்பட்டார். கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் வலுவான நிலையை எட்டியது. ஆசிரியர்களும்  உள்முரண்பாடுகள் இல்லாமல் தமது கடமையை செய்யத் தொடங்கினர்.
திரு.கோபால் அதிபராகப் பணியாற்றிய காலப் பகுதியிலேயே (01 .07 .1976 -  24 .02 .1982 ) இப் பாடசாலை 1978 இல் சூறாவளித் தாக்கத்திற்குள்ளாகி பாரிய அழிவைக் கண்டது.எல்லாக் கட்டிடங்களும் தரை மட்டமாகின. இதனைத் தொடர்ந்து பாடசாலையின் மீள் கட்டுமானத்திற்கான பொதுமக்களின் ஒன்று கூடலைத் தொடர்ந்து 11 .01 .1979 இல் 80x20 (அடி)  இல் ஓர் ஓலைக் கொட்டிலும்,13 .01 .1979 இல் 60x20 (அடி)இல் இன்னுமொரு ஓலைக் கொட்டிலும் கட்டிமுடிக்கப்பட்டன. இக் காலகட்டத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பூ.கணேசலிங்கம் அவர்களின் பங்களிப்பானது மிகவும் காத்திரமாக இருந்தது.
24 .02 .1982 இல் திரு.மு.சிவபாலப்பிள்ளை (1982 -1984 )  அதிபராகப் பொறுப்பு ஏற்றவுடன் உயர்தரம் கணித,விஞ்ஞான வகுப்புக்களில் கல்வி பயின்ற மாணவர்கள் கமு/உவெஸ்லி உ.த பாடசாலை,கமு/கார்மேல் பாத்திமாக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு செல்லத் தொடங்கினர். கலை வகுப்புக்களும் தளம்பல் நிலையை அடைந்தது. அனேகமான கலை வகுப்பு மாணவர்கள் மட்/பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு   செல்லத் தொடங்கினர்   .முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பூ.கணேசலிங்கம் அவர்களின் தலையீட்டில் கலை வகுப்பு மாணவர்கள் மீண்டும் இப் பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இக் காரணங்களால் திரு.மு.சிவபாலப்பிள்ளை பல முன்மாதிரியான விடயங்களை செய்ய நினைத்தாலும் இவரது சேவைக்காலம் திருப்தியானது எனக் கூறுவதில் அதிகமானோர் பின்நிற்கின்றனர்.
15 .09 .1984 இல் திரு.S .O . ஜெயானந்தன் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.இருந்தாலும் இவரது ஆரம்ப காலம் சாதாரணமாகக் கழிந்தாலும் இவரது  சேவைக்காலத்தில் இறுதிக் கட்டத்தில் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி வந்தது. 
1976 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இப் பாடசாலையிலேயே பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியாராகக் கடமையாற்றிய திரு.E .P.ஆனந்தராஜா 22 .02 .1988 இல் அதிபராகப் பாடசாலையைப் பொறுப்பு........அதில் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.எம்.நடராஜா, திரு.கந்தசாமி, திருமதி.எஸ்.சகுந்தலா, திரு.நடேச மூர்த்தி, திரு.அன்னநவபாரதி, திருமதி.நந்தினிநடேச மூர்த்தி, திரு.கோபாலபிள்ளை, திருமதி.லூஜீஸ், திருமதி.பிரான்சீஸ், திரு.perinparaj     போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். பாண்டு வாத்தியக்குழு உருவாக்கப்பட்டது.சாரணர் அணி உருவாக்கம்,A /ல் யூனியன் போன்ற பல சாதனைகளைப் புரிந்தார்.மதிய உணவிற்காக அநேக நேரங்களில் வீ ட்டிற்கு செல்லாமல் கல்லூரியில் தரித்து நின்று ஏதாவது செய்து கொண்டே இருக்கும் அந்த மனிதர் எளிமையானவராகவும், கண்டிப்பனவரகவும், பழைய துவிச்சக்கர வண்டி ஒன்றையே பயணத்திற்கு அதிகமாக பயன்படுத்துபவராகவும் இருந்தார்.
இவரது காலப்பகுதியிலேயே கொத்தணி முறையும் நடைமுறையிலிருந்தது. கொத்தணி முறைமையின் அதிபராகவும் இவரே கடமையாற்றினார். 
திரு.R .கோபாலபிள்ளை(1997 -2008) 27.08 .1997 அன்று இக்கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். திரு.E.Pஆனந்தராஜா முன் எடுத்த பல பணிகளை முன்னின்று வழிநடாத்தி செயல் வடிவம் பெற வைப்பதில் கவனமாய் இருந்தார்.இவரது காலப்பகுதியில் ஏராளமான பட்டதாரிகள் உருவாக்கப்பட்டனர்.இவர் ஓய்வு பெற்று சென்ற நிலையில் திரு.T . நடேச மூர்த்தி(09 .06 .2008 -22 .08 .2008 )இவர்கல்லூரியின் மிகவேகமாக மீள் கட்டுமான வேலைகளை செய்வதற்காக முனைப்புடன் செயற்பட்ட போதிலும்,துரதிஸ்டவசமாக சில நாட்களே கல்லூரியில் வேலை செய்ய முடிந்தது.என்றாலும் குறுகிய காலத்திற்குள் இவர் முன் எடுத்த செயற்திட்டங்கள் காத்திரமானவை.
இவ்வாறான ஒரு இக்கட்டான காலப்பகுதியில் இக் கல்லூரிக்குக் கிடைத்தவரமாக திரு.K .நல்லதம்பி அவர்கள் 22 .11 .2008 இல் புதியஅதிபராகப் பதவி யேற்றுக் கொண்டார். இவர் கல்லூரியைப் பாரமெடுத்த பொழுது இவரைபற்றியும், இவரது சேவையைப் பற்றியும் பெரியகல்லாறு        

 தொடர்ந்ததும்  எமது கல்லூரின் வரலாறு பிரசுரிக்கப்படும். நீங்களும் இது தொடர்பாக உங்களுக்குத் தெரிந்த வரலாற்று விடயங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.